News December 14, 2024

மருத்துவமனை தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு

image

திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி இரவு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 41 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த தீ விபத்து தொடர்பாக சீலப்பாடி விஏஓ அளித்த புகாரில் இன்று திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Similar News

News April 8, 2026

திண்டுக்கல்: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் திண்டுக்கல் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0451-2432817 / 0451-2441232 தெரிவியுங்க. இந்த தகவலை SHARE IT.

News April 8, 2026

திண்டுக்கல்: காதல் தோல்வியால் இளைஞர் விபரீத முடிவு!

image

மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் வெற்றி பிரதாப் (24) காதல் தோல்வியால் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்த அவர், யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த வந்த திண்டுக்கல் தாலூகா போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் GH-க்கு அனுப்பி வைத்து விசாரனை.

News April 8, 2026

திண்டுக்கல்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்.

image

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு நேர ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

error: Content is protected !!