News January 23, 2025

மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் 

image

தேவகோட்டை வட்டம் திருவேகம்பத்தூர் ஊராட்சியில் திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கூடுதல் கட்டிடமாக மருத்துவமனை கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் உதவி செயற்பொறியாளர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News December 25, 2025

சிவகங்கையில் 21,545 பேர் பாதிப்பு.!

image

தமிழகத்தில் இந்தாண்டு 5.05 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பு. இதில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் சுமார் 21,454 பேர் நாய்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை அலட்சியப்படுத்தாமல், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

News December 25, 2025

சிவகங்கை வரும் முதல்வர் ஸ்டாலின்.!

image

காரைக்குடி அருகே செட்டிநாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்டிடம், கழனிவாசலில் சட்டக்கல்லுாரிக்கான வகுப்பறை கட்டடம், கருத்தரங்கு கூடம் ஆகியவற்றை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜனவரி.18 அன்று திறந்து வைத்து, சிராவயலில் உள்ள மணிமண்டபத்தை பார்வையிடுகிறார். முதல்வருக்கு வரவேற்பு அளிக்கும் விதமான ஏற்பாடுகளை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க வினர் செய்து வருகின்றனர்.

News December 24, 2025

சிவகங்கை: சுகாதாரத்துறையில் வேலை; மிஸ் பண்ணிடாதீங்க.!

image

சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் உதவி அறுவை சிகிச்சை டாக்டர் (பொது) பிரிவில் மகப்பேறு 182, தடயவியல் 50, முதியோர் மருத்துவம் 10, இதய ஆப்பரேஷன் 20, ரேடியாலஜி 37 என மொத்தம் 299 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இங்கே<> கிளிக் செய்து <<>>முழுவிவரங்களை தெரிந்து கொண்டு ஜன.7 க்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!