News November 9, 2024
மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய எம்எல்ஏ
சின்னசேலம் அருகே உள்ள மேலூர் கிராமத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களை எம்எல்ஏ நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
Similar News
News November 19, 2024
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் பயனாளிகளின் விபரங்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் இருப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
News November 19, 2024
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவகள் 2024-25ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற தங்கள் அருகாமையில் உள்ள இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் மதிப்பெண் சான்று கல்விச் சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் www.tnesevai.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 18, 2024
இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்களை பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.