News March 15, 2025
மருத்துவத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் தேசிய சுகாதார திட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்தத்தில் மருத்துவ அலுவலர் 2, செவிலியர் 2 சுகாதார ஆய்வாளர் 2, மருத்துவப் பணியாளர் 2 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் 24 மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 31, 2025
மேம்பாலம் திறப்பு விழா குறித்து எம்.எல்.ஏ அறிவிப்பு

சிவகாசியில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து எம்எல்ஏ அசோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மேம்பாலத்தில் மின்விளக்கு பொருத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளதுடன் பாலத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் தனியார் பங்களிப்புடன் மின் விளக்குகள், நீரூற்று பொருத்தப்பட உள்ளது.
பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
News October 30, 2025
விருதுநகரில் இலவச முழுமாதிரி தேர்வுகள்

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் – 3644 பணிக்காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவ.9 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு இலவச முழுமாதிரித் தேர்வுகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நவ.01 அன்று நடைபெற உள்ளதாக ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
விருதுநகர்: PHONE தொலைந்தால் நோ டென்ஷன்., இதோ தீர்வு

விருதுநகர் மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


