News September 4, 2024

மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை

image

சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதலாமாண்டு மாணவர் இன்று காலை விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு நடத்திய விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் (29) என்பது தெரியவந்தது. போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 19, 2025

விருதுநகருக்கு தீபாவளியன்று கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென், மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில் இன்றும், நாளையும்(அக்.19, 20) விருதுநகர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட முடியுமா என அனைவரின் மனதிலும் கேள்வி எழுந்துள்ளது.

News October 19, 2025

விருதுநகர்: ஊராட்சி செயலர் பணி., தேர்வு இல்லை

image

விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK<<>> செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 19, 2025

விருதுநகர்: கனமழை – PETROL BUNK-ல் நிகழ்ந்த சம்பவம்

image

அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று அக்.19 அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக அந்த பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்து கார் முற்றிலும் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக இதில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!