News September 27, 2024
மருதமலையில் 300 கார்களுக்கு மட்டும் அனுமதி

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மலைப்பாதையில் கார் உள்பட 4 சக்கர வாகனங்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்படி காலை 6 முதல் மதியம் 1 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும் மதியம் 1 முதல் மாலை 6 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும் என நாள் ஒன்றுக்கு 300 நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என இன்று தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 5, 2025
கோவை: தேர்வில்லாமல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

கோவை மக்களே, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய உதவியாளர், தட்டச்சர், சீனியர் கணக்காளர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கு தேர்வில்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 5, 2025
கோவையில் நூதன முறையில் மோசடி!

கோவை சிவானந்தபுரம் வேல்முருகன் நகரை சேர்ந்தவர் காயத்ரி (29). இவரிடம் 50 வயது பெண் நட்பு ரீதியாக பழகி வந்தார். நேற்று இந்த பெண் காயத்ரியிடம் 9cm நீளம் 6cm அகலத்தில் ஒரு கட்டியை தங்க கட்டி என தந்து, அதை விற்று தரும்படி கூறி 3½ பவுன் தங்கச் செயினை வாங்கிச் ஏமாற்றி சென்றார். பின் காயத்ரியன் கணவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.
News August 5, 2025
கோவை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

கோவையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.