News December 24, 2025
மருதமலையில் கருஞ்சிறுத்தை

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸ் காலனியில் கருஞ்சிறுத்தை ஒன்று அங்குள்ள வீட்டில் புகுந்திருப்பதாக இன்று வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற வனத்துறையினர் கருஞ்சிறுத்தை குட்டியை நீண்ட நேரமாக போராடி பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அந்த கருஞ்சிறுத்தை குட்டியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News December 27, 2025
கோவை: ரூ.5 லட்சம் காப்பீடு விண்ணப்பிப்பது எப்படி

கோவை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். (SHARE)
News December 27, 2025
கோவை: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
அறிவித்தார் கோவை கலெக்டர்

கோவை கலெக்டர் பவன்குமார் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் அல்லது திருத்தம் செய்ய டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டம் முழுவதும் உள்ள 3,563 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் இம்முகாம்களைப் பயன்படுத்துமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.


