News August 10, 2024
மரவள்ளி கிழங்கு குறித்து இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஆகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மரவள்ளி பயிர்களுக்கேற்ற மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை அணுகவும் 12.08.24-ந் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 18, 2025
நாமக்கல்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

நாமக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
News October 18, 2025
நாமக்கல் மக்களே இன்று கவனம்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்படுள்ளது. வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்லவும். அதிகம் SHARE பண்ணுங்க!
News October 18, 2025
நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

பள்ளி மற்றும் கல்லூரில் படிக்கும் மாணவர்கள் மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளது என நூதன முறையில் பணம் திருட்டு தற்சமயம் நடைபெற்று வருகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள், வங்கி இருப்பு அல்லது Google Pay பற்றிய விவரங்களை தங்களுக்கு தெரியாதவர்களிடம் பகிர வேண்டாம் என நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.