News September 29, 2025
மரணத்துக்கு முன்… திடுக்கிடும் உண்மை

மரணம் சம்பவிக்கும் முன் மூளையில் என்ன நடக்கிறது என்ற மனித குலத்தின் நீண்டகால புதிருக்கு விடைக் கொடுத்துள்ளது லூயிஸ்வில்லி யுனிவர்சிடியின் லேட்டஸ்ட் ஆய்வு. மரணத்துக்கு முன், நம் மூளை அதிவேகமாக வாழ்க்கையின் முக்கிய நினைவுகளை மீட்டெடுத்து, மனக்கண் முன் நிறுத்துவதை கண்டறிந்துள்ளனர். இது, மரணத்துக்கு அப்பால் என்ன என்பதை பற்றி புதிய தேடலுக்கு வழிவகுத்துள்ளது. எனில், மூளைச்சாவுடன் வாழ்வு முடிந்துவிடாதா?
Similar News
News September 29, 2025
பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள்

*விதைத்தவன் உறங்கலாம், ஆனால் விதைத்தவன் ஒருபோதும் உறங்குவதில்லை.
*கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால், போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.
*தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்.
*நம் தன்னம்பிக்கை, திட்டம், நடவடிக்கை ஆகியவை தீவிரமாகியிருக்கும் போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல.
News September 29, 2025
மத்திய கிழக்கில் மகத்தான வாய்ப்பு: டிரம்ப்

மத்திய கிழக்கில் சிறப்பான ஒன்றை அடைய ஒரு உண்மையான வாய்ப்பு உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து சமீபத்தில் ஐநாவில் அவர் பேசியிருந்தார். இந்நிலையில், ட்ரூத் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், அனைத்து நாடுகளும் ஒரு சிறப்பான முடிவை எதிர்நோக்குவதாகவும், அதை தாங்கள் (USA) முடிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News September 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 473 ▶குறள்: உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். ▶பொருள்: தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.