News April 27, 2024

மரக்கடையில் பயங்கர தீ விபத்து

image

ஈரோடு பெரிய வலசு – கொங்குநகர் பகுதியில் பொன்னுசாமி (60) என்பவருக்கு சொந்தமான மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடை உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் மரக்கடையில் தீ பிடித்து புகை வந்துள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்த தறிப்பட்டறை தொழிலாளர்கள், ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர். பின் 4 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.

Similar News

News October 20, 2025

ஈரோடு: 7 கிராமங்களின் விநோத கொண்டாட்டம்!

image

ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு மக்கள் பட்டாசுகளே இல்லாமல் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.அங்குள்ள பறவைகள் சரணாலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில், உள்நாட்டுப் பறவைகள் மட்டுமின்றி, சைபீரியா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக வெள்ளோட்டைச் சுற்றியுள்ள 6 கிராமங்களில் 19 ஆண்டுகளாக பட்டாசுச் சத்தம் கேட்பதில்லை

News October 19, 2025

ஈரோடு: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை.நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 மற்றும் 1912 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News October 19, 2025

ஈரோடு: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க் <<>>மூலம் வரும் அக்.29க்குள் விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்த நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்க SHARE IT

error: Content is protected !!