News April 29, 2025
மயோனைஸ் பயன்படுத்த தடை – ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்; “பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் கிருமி நீக்கப்படாத மயோனைஸ் சைஸ்சினை வணிக விற்பனையாளர்கள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. உடல் உபாதைகளை ஏற்படுத்தும் இந்த மயோனைஸை வணிக நிறுவனங்களில் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News April 29, 2025
தூத்துக்குடியில் மகளிர் கிரிக்கெட் அணித் தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான 12 வயதிற்கு மேற்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணித் தேர்வு (மே1) வியாழன் அன்று தூத்துக்குடி JMJ கிரிக்கெட் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 8015621154, 8754004377 மற்றும் 9944833333 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 29, 2025
திருமண தடை நீங்க வேண்டுமா? இங்கே வாங்க

குலசேகரப்பட்டினத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலில், தலவிருட்சம் மாமரத்தின் கீழே மாவடி அம்மன் சிலை உள்ளது. அம்மனை குழந்தை பாக்கியம் இல்லாதோர் மாங்கனிகளை படைத்து வழிபாடு செய்வார்கள். அதேபோல் திருமண தடை உள்ளவர்கள் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு செய்து வளையல் படைத்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.
News April 29, 2025
தூத்துக்குடி நீதிபதிகள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்ட நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மகளிர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மாதவ ராமானுஜம் மதுரை மாவட்டம் மூன்றாவது கூடுதல் நீதிபதியாகவும், தூத்துக்குடி குடும்ப நல நீதிமன்ற நீதிபதி வி சுரேஷ் ஈரோடு மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிபதியாக பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.