News August 26, 2024
மயில் வாகனத்தில் முருகன் தெய்வானை

பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாதந்திர கார்த்திகை முன்னிட்டு முருகன் தெய்வானை மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் முருகன் தெய்வானை எழுந்தருள சிறப்பு பூஜைகளுடன் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் முருகன் தெய்வானையை வழிபட்டனர்.
Similar News
News March 6, 2026
மதுரை: அகில இந்திய அளவில் சாதனை படைத்த மாணவி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மார்ச்.6) வெளியாகியுள்ளன. இதில் வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அனுஜ் அக்னிஹோத்ரி முதலிடத்தையும், ஆகாஷ் துல் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். மொத்தம் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராஜேஸ்வரி நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்வர் என்பது குறிப்பிடத்தக்கது
News March 6, 2026
மதுரை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News March 6, 2026
FLASH மதுரை: மின்சாரம் தாக்கி தந்தை & மகன் பலி

வாடிப்பட்டி, நாராயணபுரத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி(79). இவரது மகன் அரசு பஸ் டிரைவர் ஆதிநாராயணன்(55) இவரது தம்பி மகன் கல்லூரி மாணவர் கிருஷ்ணன்(20). 3 பேரும் தோட்டத்தில் மாட்டு தீவனம் சேகரித்த போது மின்சார வயர் அறுந்து கிருஷ்ணனின் மேல் விழுந்தது. அவரை காப்பாற்ற சென்ற மற்ற இருவர் உள்பட 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் ஆதிநாராயணன் & கிருஷ்ணன் பலியாயினர். சின்னதம்பி சிகிச்சையில் உள்ளார்.


