News October 6, 2025
மயிலாடுதுறை: B.E / B.Tech படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

மத்திய அரசின் BEL நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த<
Similar News
News October 16, 2025
மயிலாடுதுறை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருத்தி அமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டு சம்பா சிறப்பு பருவம் நெல் ll பயிருக்கு காப்பீடு செய்யலாம். மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சிறப்பு பருவ பயிருக்கு 277 கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. வருகிற 15.11.2025 வரை காப்பீடு செய்யலாம் காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு ரூ. 547.50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்
News October 16, 2025
மயிலாடுதுறை: ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35(SC/ST-40, OBC-38)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 16, 2025
மயிலாடுதுறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 15-வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குளிச்சார் பகுதியை சேர்ந்த விமல்ராஜ், சாலமன், கலைவாணன் ஆகியோர் கடந்த 2021ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றவாளிகள் மூவருக்கும் 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி சத்தியமூர்த்தி தீர்ப்பளித்துள்ளார்.