News January 19, 2025
மயிலாடுதுறை: 86% பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்க்கரை, வேஷ்டி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அரசின் பரிசுத்தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2,83,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, அதில் 86% அட்டைதாரர்கள் மட்டுமே பரிசுத்தொகுப்பினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 39,620 பேர் பரிசுத்தொகுப்பு பெற ஆர்வம் காட்டவில்லை.
Similar News
News August 14, 2025
மயிலாடுதுறை: தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர வாய்ப்பு!

செம்பனார்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இந்த தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற விருப்பம் உள்ள மாணவர்கள் தங்களது 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, புகைப்படம் (4) ஆகிய விபரங்களுடன் அரசினர் தொழிற் பயிற்சி நிலையtத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கவும். ஷேர்!
News August 14, 2025
மயிலாடுதுறையில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தருமை ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
மணிவிழாவை முன்னிட்டு, 27 தம்பதியருக்கு இலவச திருமணம் தருமபுரம் ஆதீன வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு, ஸ்ரீலஸ்ரீ குருமணிகளின் மணிவிழா
நிகழ்வில் ஒரே மேடையில் மாதம் ஐப்பசி 23 ஆம் நாள் 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை. காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருமணங்கள் நடைபெற உள்ளது.
News August 14, 2025
சீர்காழி: புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய புதிய காவல் ஆய்வாளராக ஆ.கமல்ராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தார். சீர்காழி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியில் இருந்த புயல் பாலச்சந்திரன் மயிலாடுதுறை சைபர் கிரைம் காவல் ஆய்வாளராக பணி மாறுதலில் சென்றுள்ளார்.