News September 8, 2025
மயிலாடுதுறை: 10th போதும் ரூ.69,100 சம்பளத்தில் வேலை

மயிலாடுதுறை மக்களே, மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.09.2025 தேதிக்குள் <
Similar News
News September 9, 2025
மயிலாடுதுறையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாகை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ரோனிக் ராஜ் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் செப்.,10-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் மாவட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் நேரில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
News September 8, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விவரங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை குத்தாலம் மணல்மேடு பொறையார் செம்பனார்கோயில் சீர்காழி திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
News September 8, 2025
மயிலாடுதுறை நகராட்சி சார்பில் அறிவிப்பு

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரானது கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முடிகண்டநல்லூரிலிருந்து நீர் கொண்டு வரப்படும் குழாயில் பழுது ஏற்பட்டதன் காரணமாக வருகிற செப்.,10-ம் தேதி ஒருநாள் மட்டும் உள்ளூர் நீர் ஆதாரத்திலிருந்து நீர் வழங்கப்படும் என்பதை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.