News January 27, 2025
மயிலாடுதுறை: 104 நிறுவனங்கள் மீது வழக்கு

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் திருவாருர் தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் அலுவலர்கள் நேற்று (ஜன.26) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் குடியரசு தினத்தன்று ஊழியர்களுக்கு முறையாக விடுமுறை அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்காத 60 கடைகள், 43 உணவு நிறுவனங்கள், ஒரு மோட்டார் நிறுவனம் என மொத்தம் 104 நிறுவனங்கள் மீது அதிரடியாக வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Similar News
News August 16, 2025
மயிலாடுதுறை: பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை!

ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையான (BRBNMPL) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்படவுள்ளது. கல்வி தகுதி Deputy Manager பதவிக்கு B.E , B.Tech மற்றும் Process Assistant Grade-I பதவிக்கு ITI , Diploma முடித்திருக்க வேண்டும். Rs.24,500/- சம்பளம் முதல் Rs.88,638 வரை வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு செல்ல விரும்பினால் <
News August 16, 2025
மயிலாடுதுறை: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி வேண்டுமா?

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரெண்டாம் தேர்ச்சி பெற வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற இங்கே <
News August 16, 2025
சீர்காழியில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

சீர்காழி ஜெயின் சங்கம், தனியார் பண்ட் மற்றும் பாண்டிச்சேரி தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் சர்க்கரை பரிசோதனை முகாம் நாளை (ஆக.17) சீர்காழி சுபம் திருமண மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுத்துள்ளனர்.