News April 13, 2025

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரர் கோயில்

image

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற வைத்தீஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் சிவனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். சிவனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதியும், சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News November 4, 2025

மயிலாடுதுறை: மரம் நடும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் வட்டத்திற்குட்பட்ட ஆறுபாதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியாளர்களுடன் கலந்துரையாடி விவரங்களை கேட்டறிந்தார்.

News November 4, 2025

மயிலாடுதுறை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.<>udyamimitra<<>>.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 4, 2025

மயிலாடுதுறை: ஆய்வு செய்த கலெக்டர்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறுபாதி ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஒன்றாக வாக்காளர்களுக்கு கணக்கிட்டு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலால் உதவி ஆணையர் மாணிக்கராஜ் உடன் இருந்தார்.

error: Content is protected !!