News December 16, 2025

மயிலாடுதுறை: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

மயிலாடுதுறை, பொறையாரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பொறையாா் நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் டிச.20ஆம் தேதி காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்துகொண்டு பயான்பெருமாறு தெரிவித்துள்ளார்.

Similar News

News December 26, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் 5,473 பேர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக 5,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 5,473 பேர் கைதாகி உள்ளனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 652 வழக்குள் பதிவுசெய்யப்பட்டு, 666 நபர்கள் கைதாகினார். மேலும் புகையிலை பொருட்களை விற்ற 30 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ.67 லட்சத்து 50 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2025

மயிலாடுதுறை: போக்சோ கைதி குண்டாசில் கைது!

image

நெடுவாசலை சேர்ந்த ஆனந்தராஜ் (40) என்பவர் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சீர்காழி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் செய்து கைது செய்தனர். இந்நிலையில் ஆனந்தராஜ் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், ஆனந்தராஜை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.

News December 26, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை 2024-2025க்கான நடப்பாண்டில் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட 47 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணையில் இருந்த 1974 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் மூலமாக தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!