News April 4, 2025

மயிலாடுதுறை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது அறுவடை செய்யப்படும் மார்கழி பட்ட நிலக்கடலையினை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏப்ரல் 02 -ம் தேதி முதல் மறைமுக ஏலம் நடத்த திட்டமிடப்பட்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Similar News

News April 10, 2025

மயிலாடுதுறை: அனைத்தும் அரும் உத்தவாகநாதர்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமணஞ்சேரியில் உத்தவாகநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான உத்தவாகநாதரை வழிபட்டால் வேலை வாய்ப்பு, தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மேலும் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி மன அமைதி என வாழ்வின் சகலமும் கைகூடும். வாழ்வில் எல்லாமும் கிடைக்க இங்கு சென்று வழிபடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News April 10, 2025

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய 15 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் 3 பெண்களுக்கு வழங்கப்படும். ரூ.1 லட்சமும், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். இதற்கு, அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு APPLY NOW!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு <>அதிகாரப்பூர்வ இணையத்தில்<<>> ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்றே கடைசி நாள் என்பதால் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உடனே APPLY செய்து, உங்க நண்பர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க…

error: Content is protected !!