News February 3, 2026
மயிலாடுதுறை: விபத்தில் ஊராட்சி செயலர் பலி

கொள்ளிடம், மகேந்திரபள்ளி கிராமத்தை சேர்ந்த சரவணன் (46) என்பவர் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ஊராட்சி செயலராக பணியாற்றி வருகிறார். இவர் கொள்ளிடம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆணைக்காரன்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 4, 2026
மயிலாடுதுறை: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

மயிலாடுதுறை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<
News February 4, 2026
மயிலாடுதுறை: WhatsApp பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் தங்களது WhatsApp-க்கு வரும் பங்குசந்தை முதலீடு குறித்த லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்களது பணத்தை இழக்க நேரிடலாம். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
News February 4, 2026
மயிலாடுதுறை: இறந்து கரை ஒதுங்கும் ஆலிவ் ரெட்லி ஆமைகள்

சீர்காழி அருகே உள்ள கூழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் நேற்று சில ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியது. இதனை கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த ஆமைகள் விசைப்படகுகளில் சிக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


