News March 27, 2025

மயிலாடுதுறை: வாகன தணிக்கையில் 12 நாள்களில் 100 பேர் கைது

image

மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி எம். சுந்தரரேசன் மேற்பார்வையில், அமலாக்கப்பிரிவு ஆய்வாளர்கள் அபிராமி, ஜெயா மற்றும் போலீஸார் மார்ச் 12 முதல் மார்ச் 23-ஆம் தேதி வரை 12 நாள்களில் மேற்கொண்ட தீவிர சோதனையில் மது மற்றும் சாராய கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர். நண்டலார் சோதனைச் சாவடியில் 22 வழக்குகள், நல்லாடை சோதனைச்சாவடியில் 38 வழக்குகள் பதிவாகி உள்ளன.

Similar News

News April 2, 2025

வைத்தீஸ்வரர் ஆலயம் சென்றால் முன்னேற்றம் உண்டு

image

மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊரில் வைத்தீஸ்வரன் ஆலயம் உள்ளது. இங்கு சென்று மூலவரான சிவனை வழிபட்டு, அங்குள்ள செவ்வமுத்துக்குமரர் சன்னதியில் உள்ள முருகனை வழிபட்டால், தொழில் தொடங்கி விரக்தியில் இருப்பவர்களின் கஸ்டங்கள் நீங்கும். மேலும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுமென நம்பப்படுகிறது. உடனே உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE செய்து அவர்களது முன்னேற்றத்திற்கு நீங்களும் உதவுங்கள்.

News April 2, 2025

மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்பு

image

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், மயிலாடுதுறையில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

வேலை தேடும் இளைஞர்களை கவரும் வகையில் பகுதி நேர வேலை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து போலியான செய்திகள் ஆன்லைனில் உலவி வருகின்றன. அந்த செய்திகளை நம்பி யாருக்கும் பணம் அனுப்பி ஏமாந்து விடாதீர்கள் என மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளது. Share செய்யுங்கள்.

error: Content is protected !!