News January 23, 2026
மயிலாடுதுறை: வழிப்பறியில் ஈடுப்பட்ட இளைஞகள்

மயிலாடுதுறை மாவட்டம் கல்யாண சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபினாஷ்(27). இவர் அஞ்சாறுவார்தலை பங்கில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த ராகுல் டிராவி(21), ஆர்யா(22) ஆகியோர் அவருக்கு லிப்ஃட் கொடுத்து , சென்பகச்சேரி அருகே அபினாஷிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதையெடுத்து அவர் கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் திருடர்களை பிடித்து குத்தாலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்
Similar News
News January 24, 2026
மயிலாடுதுறை எஸ்பி தலைமையில் உறுதிமொழி

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் தலைமையில் வாக்காளர் தினத்தை ஒட்டி நேற்று வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் அனைத்து நிலை காவல் அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
News January 24, 2026
மயிலாடுதுறை: அதிரடி காட்டிய அதிகாரிகள்

மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஊராட்சியில், நேற்று உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் மரு.பிரவீன் குமார் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.600 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.
News January 24, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம

மயிலாடுதுறை மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.


