News December 16, 2025
மயிலாடுதுறை: ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை ரெடி!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
Similar News
News December 17, 2025
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை வட்டம் சித்தர்காடு பகுதியில் உள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் உள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறக்கப்பட்டு, முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியர் ஸ்ரீகாந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் தனி வட்டாட்சியர் முருகேசன் உடன் இருந்தார்
News December 17, 2025
மயிலாடுதுறை: காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பதிவான கொடுங்குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை கிடைக்கும் வகையில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற அலுவல் புரிந்த காவல் ஆளிநர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் காவல் அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
News December 17, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடி, குத்தாலம் துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான குத்தாலம்டவுன், குத்தாலம் தேரடி, மாதிரி மங்கலம், கடலங்குடி, வானதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிக்குத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, ஆலங்குடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க


