News August 16, 2024

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் புதிய அப்டேட்

image

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படி, இன்று முதல் QR கோடு மூலம் ஸ்கேன் செய்து‌ பணம் செலுத்தும் வசதி டிக்கெட் கவுண்டரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பணம் அனுப்பியவுடன் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 4, 2025

மயிலாடுதுறை: மரம் நடும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் வட்டத்திற்குட்பட்ட ஆறுபாதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியாளர்களுடன் கலந்துரையாடி விவரங்களை கேட்டறிந்தார்.

News November 4, 2025

மயிலாடுதுறை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.<>udyamimitra<<>>.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 4, 2025

மயிலாடுதுறை: ஆய்வு செய்த கலெக்டர்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறுபாதி ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஒன்றாக வாக்காளர்களுக்கு கணக்கிட்டு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலால் உதவி ஆணையர் மாணிக்கராஜ் உடன் இருந்தார்.

error: Content is protected !!