News May 3, 2024

மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு புதிய வரவு

image

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நீண்ட நாள் கோரிக்கையான பேட்டரி கார் சேவை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. தொடர்ந்து ஒரு நபருக்கு 30 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படும் நிலையில் 9994165945 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ரயில் பயணிகள் பயன்படுத்தலாம் என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 26, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

News August 25, 2025

மயிலாடுதுறை: ரூ.19,900 சம்பளத்தில் வேலை!

image

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு, ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க செப்.,21 கடைசி நாளாகும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 25, 2025

மயிலாடுதுறை: உதவித்தொகை ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தாட்கோ சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த் திருமண உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!