News January 7, 2026
மயிலாடுதுறை: ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழப்பு

சீர்காழி ரயில் நிலையம் அருகில் பாதரக்குடி பகுதியில் இன்று காலை ரயிலில் அடிபட்ட நிலையில் 3 1/2 வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்துள்ளது. ரயில் பாதையை சோதனையிட சென்ற ரயில்வே கீமேன்கள் அதைக் கண்டு ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் மயிலாடுதுறை ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். ரயில்வே போலீசார் மானின் உடலை கைப்பற்றி சீர்காழி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News January 22, 2026
மயிலாடுதுறை: 1000 ஆண்டு பழமையான கோயில்

மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரியில் அமைந்துள்ள வாகீஸ்வரர் கோயில், தத்தசோழன் காலத்தில் கட்டப்பட்டது. இது 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக வாகீசுவரர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். ஆவுடையார் சதுர வடிவில் காணப்படுகிறார்.தவத்தால் எதனையும் அடையலாம் என பிரம்மா கருத்து கூற சரஸ்வதி இங்கு கோயில் கொண்டுள்ள சிவன் முன்பாக தவம் இருந்து தன் குறை நீங்கப் பெற்றதாக இக்கோயில் ஐதீகம்.
News January 22, 2026
மயிலாடுதுறை: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

மயிலாடுதுறை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு<
News January 22, 2026
மயிலாடுதுறை: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க


