News November 11, 2025
மயிலாடுதுறை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்கள் நேற்று முன்தினம் இலங்கை கடல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, மீனவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
மயிலாடுதுறை மக்களே, முற்றிலும் இலவசம்!

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர், <
News November 11, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (நவ.10) இரவு 10 மணி முதல் இன்று (நவ.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 10, 2025
மயிலாடுதுறை: 328 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் இன்று (நவ.10) நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர். இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 328 மனுக்கள் பெறப்பட்டன. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆட்சியர், ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.


