News December 23, 2025

மயிலாடுதுறை மீனவர்கள் அவதி

image

திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் முகத்துவாரத்தில் அடிக்கடி மண்மேடுகள் ஏற்படுவதால் மீனவர்கள் தங்களது படகுகளை கடலுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். முகத்துவாரத்தை கடக்கும் விசைப்படகுகள் தரைதட்டி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே மண்மேடுகளை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்

Similar News

News December 24, 2025

மயிலாடுதுறை: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 24, 2025

மயிலாடுதுறை: SIR-ல் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் SIR-க்கு பிறகு 75,378 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். SHARE!

News December 24, 2025

மயிலாடுதுறை: பெண் மீது தாக்குதல் – 2 பேர் கைது

image

மயிலாடுதுறையை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி மகாலட்சுமி(60). இவரிடம் மயிலாடுதுறையை சேர்ந்த ஜியாவுதீன், ராமலிங்கம் ஆகியோர் ஆடு வாங்கியது தொடர்பாக ரூ.1.80 லட்சம் பாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில், பாக்கி பணத்தை கேட்டபோது இருவரும் மகாலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!