News January 25, 2025

மயிலாடுதுறை: மின் வினியோகம் நிறுத்தம்

image

மயிலாடுதுறை நகர துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.25) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதன் காரணமாக மயிலாடுதுறை, அண்ணாநகர், மூங்கில்தோட்டம், ராஜேஸ்வரி நகர், எல்.பி.நகர், தருமபுரம், அரியமங்கலம், பால்பண்ணை, மன்னம்பந்தல், குளிச்சார் சிட்கோ ஆகிய பகுதிகளுக்கும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Share It Now…

Similar News

News April 21, 2025

கர்ப்பிணியை தாக்கிய கணவர் கைது

image

மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி – ஜெயலட்சுமி தம்பதியினர். ஜெயலட்சுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் கிருஷ்ணமூர்த்தி மது அருந்திவிட்டு பிரச்சனை செய்ததால் பெற்றோர்கள் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் ஜெயலட்சுமியிடம் சமாதானம் பேசி வரச்சொல்லியபொழுது கிருஷ்ணமூர்த்தி தாக்கியுள்ளார். இதையடுத்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் காவல்துறை கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தது.

News April 20, 2025

மயிலாடுதுறை: கோடை விடுமுறை கால சிறப்பு ரயில்

image

தாம்பரம்-திருச்சி இடையே இயக்கப்படும் கோடைகால சிறப்பு ரயில் மேல்மருவத்தூர், திண்டிவனம், பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக இயக்கப்படுகிறது. முன்னதாக வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்ட இந்த ரயில் தற்போது பயணிகளின் வசதிக்காக வருகிற ஏப்.29 முதல் ஜூன்.29 வரை திங்கட்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயங்கும். அடிக்கடி சென்னை செல்லும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 20, 2025

மயிலாடுதுறையில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் Customer Care Executive பதவிக்கு 42 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!