News October 8, 2025
மயிலாடுதுறை: மின்கம்பி அறுந்து விழுந்து பரிதாப பலி

மயிலாடுதுறை, திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் புதுத் தெருவை சேர்ந்தவர் சாந்தி, விவசாய தொழிலாளியான இவர் கால்நடைகளை பராமரித்து வருகிறார். இவருடைய மூன்று எருமை மாடுகளை அண்ணன் கோயில் பகுதியில் நேற்று மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது தாழ்வாக சென்ற மின் கம்பிகள் திடீரென அறுந்து மாடுகளின் மீது விழுந்ததில், மூன்று மாடுகளும் துடிதுடித்து உயிரிழந்தன. இந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Similar News
News October 16, 2025
மயிலாடுதுறை: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

வருகிற 20-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டி கையை கொண்டாடுவதை உறுதி செய்யும் வகையில் நேற்று சீர்காழி நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கொள்ளிடம் முக்கூட்டு, மணிக்கூண்டு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு கண்டறியும் மற்றும் அகற்றும் படையினர் சோதனை மேற்கொண்டனர்
News October 16, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 15, 2025
மயிலாடுதுறை: உணவுத் தொழிற்சாலையில் ஆய்வு

மயிலாடுதுறை வட்டம் குளிச்சார் கிராமம் சிட்கோ தொழிற்பேட்டையில், மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கி கடனுதவி பெற்று இயங்கும் உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பார்வையிட்டார். தொழில் வளர்ச்சி நிலையை ஆய்வு செய்து, திட்டத்தின் பயன்கள் குறித்து தொழில் முனைவோரிடம் கேட்டறிந்தார்.