News February 2, 2026
மயிலாடுதுறை மாவட்ட போலீசார் எச்சரிக்கை

மயிலாடுதுறை மக்கள் சமூக ஊடகங்களில் உங்கள் முகவரி அல்லது தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். அவற்றை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தி உங்களை கண்காணிப்பதற்காக பின் தொடர முடியும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 3, 2026
மயிலாடுதுறை: விபத்தில் ஊராட்சி செயலர் பலி

கொள்ளிடம், மகேந்திரபள்ளி கிராமத்தை சேர்ந்த சரவணன் (46) என்பவர் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ஊராட்சி செயலராக பணியாற்றி வருகிறார். இவர் கொள்ளிடம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆணைக்காரன்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News February 3, 2026
மயிலாடுதுறை: மின்தடை அறிவிப்பு!

மயிலாடுதுறையில் நாளை (பிப்.4) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக மணல்மேடு, ராதாநல்லூர், கிழாய், கடலங்குடி, திருமங்கலம், இளந்தோப்பு, பட்டவர்த்தி, மண்ணிப்பள்ளம், சித்தமல்லி, திருச்சிற்றம்பலம், திருவாளப்புத்தூர், வரதம்பட்டு, பாண்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News February 3, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு. உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக ஸஅழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.


