News April 25, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றம் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது அலைபேசியில் 9626169492 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Similar News

News April 25, 2025

நற்கருணை வீரன் விருது அறிவிப்பு வெளியிட்ட ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாலை விபத்தில் படுகாயமுற்றவா்களை காப்பாற்ற உதவுபவா்களுக்கு நற்கருணை வீரன் விருது வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். விபத்தில் காயமடைந்தவா்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்குபவா்களை ஊக்குவிக்க நற்கருணை வீரன் விருது வழங்கப்படுகிறது. மேலும் ₹5000 ரொக்கமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

News April 25, 2025

பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <>க்ளிக் செய்யுங்கள்<<>>. அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். ஷேர் பண்ணுங்க

News April 25, 2025

மயிலாடுதுறை: தமிழ்நாடு காவல் துறையில் 1,299 காலி பணியிடங்கள்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ <>இணையத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!