News September 27, 2025
மயிலாடுதுறை: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை, குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக பல போலியான ஆன்லைன் நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருகின்றனர். பொதுமக்கள் அவற்றை நம்பி முன் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
Similar News
News January 5, 2026
மயிலாடுதுறை: ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அமைச்சர்

மயிலாடுதுறை மாவட்டம் திருவிளையாட்டம் ஊராட்சி பெருமுலை கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு அதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் எம்பி சுதா பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர்.
News January 5, 2026
மயிலாடுதுறை: 10th போதும்.. தமிழக அரசு வேலை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project scientist, Project Associate உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 22
3. சம்பளம்: ரூ.12,000 – ரூ.1,00,000/-
4. கல்வித் தகுதி: 10th / 12th / Diploma / B.E / BTech / M.E / M.Tech
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 5, 2026
மயிலாடுதுறை: அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் முழு நேர கிளை நூலகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு நூலகத்திற்கு அடிக்கல் நாட்டை பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை எம்பி சுதா, எம்எல்ஏ நிவேதா எம் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


