News December 29, 2025

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

image

மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் திருவெண்காடு அரசு சமூக நீதி பள்ளி மாணவிகள் விடுதி, கல்லூரி மாணவிகள் விடுதியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 50 மாணவிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் உரிய சான்றுகளுடன் வருகிற 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்

Similar News

News January 8, 2026

மயிலாடுதுறை: வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்

image

செம்பனார்கோயில் அருகே குளிச்சாறு பகுதியில் உள்ள வாய்க்காலில் நேற்று முன்தினம் இரவு ஆண் பிணம் கிடந்தது. செம்பனார்கோயில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அவர் குளிச்சாறு கிராமம் இடையான் தோப்பு தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் ராமச்சந்திரன் (30) என தெரிய வந்தது. இதையடுத்து செம்பனார்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 8, 2026

மயிலாடுதுறை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News January 8, 2026

மயிலாடுதுறை: புகார் எண்கள் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், வருகிற ஜன.9, 10 தேதிகளில் கனமழை பெய்ய கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புகார் எண்கள் வெளியிட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04364-222588 கட்டணமில்லா தொலைபேசி எண் 04364-1077, மின்சாரத்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் மயிலாடுதுறை (04364-252218, 9498482319), சீர்காழி (04364-279301, 9445854006) என்ற எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!