News December 25, 2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

TNPSC விரிந்துரைக்கும் தேர்வானது வருகிற 27 – 30-ந்தேதி வரை மயிலாடுதுறை தியாகி ஜி நாராயண சாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 9 மணிக்குள் வரவேண்டும் என்றும் பிற்பகல் தேர்விற்கு மதியம் 2 மணிக்கு மேல் வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது எனவும் கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 3, 2026

மயிலாடுதுறை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News January 3, 2026

மயிலாடுதுறை: 2025-ல் இத்தனை திருட்டா?

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2025) 98 திருட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் 8 வழக்குகள் பெருங்கொள்ளை குற்ற வழக்குகள் ஆகும். இந்த திருட்டு குற்ற வழக்குகள் தொடர்பாக 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், திருட்டுப்போன ரூ.81 லட்சத்து 82 ஆயிரம், மொத்த சொத்து மதிப்பில் ரூ.63 லட்சத்து 85 ஆயிரத்து 750 மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

News January 3, 2026

மயிலாடுதுறை: மின்தடை தற்காலிகமாக ஒத்திவைப்பு

image

மயிலாடுதுறை வட்டம் மணக்குடி துணை மின் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் மின்தடை செய்யப்படுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!