News December 23, 2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுபவர்களுக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெரும் விவசாயிகளுக்கு பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுடைய விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை அணுகி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ.150 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

Similar News

News January 5, 2026

மயிலாடுதுறை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

image

மயிலாடுதுறை மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News January 5, 2026

மயிலாடுதுறை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

<>கூகுளில் mylpg<<>> என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 5, 2026

மயிலாடுதுறை: ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அமைச்சர்

image

மயிலாடுதுறை மாவட்டம் திருவிளையாட்டம் ஊராட்சி பெருமுலை கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு அதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் எம்பி சுதா பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர்.

error: Content is protected !!