News November 7, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொற்கை கிராமத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஒன்றாக வாக்காளர்களுக்கு கணக்கிட்டு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News November 7, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2112 பேருக்கு தேர்வு!

டிஎன்யுஎஸ்ஆர்பி நடத்தும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு வருகிற 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1542 ஆண்கள் மற்றும் 570 பெண்கள் என மொத்தம் 2112 பேர் தேர்வு எழுத உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏவிசி கலைக்கல்லூரியில் ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் ஏவிசி பொறியியல் கல்லூரியில் பெண் விண்ணப்பதாரர்கள் என இரண்டு தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
News November 7, 2025
மயிலாடுதுறை: இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.7) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News November 7, 2025
மயிலாடுதுறை: 12th போதும்! அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


