News April 24, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏ.வி.சி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்கு பாதுகாப்பு அறைகளின் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மகாபாரதி இன்று ஆய்வு செய்தார். அப்போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News

News January 22, 2026

மயிலாடுதுறை: ஆடு, கோழி பண்ணை அமைக்க மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in என்ற<<>> இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஹெச் எஸ் ஸ்ரீகாந்த் செய்தி குறிப்பு வெளியிட்டார். அதில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜன.26ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டமானது 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது. இதில் அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை முன் வைக்கலாம்’’ எனவும் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

மயிலாடுதுறை: விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலே பலி – சோகம்

image

கொள்ளிடம் அருகே புத்தூர் மேலதெருவை சேர்ந்தவர் பாலு(58). விவசாய கூலி தொழிலாளியான இவர், நேற்று மதியம் வீட்டிலிருந்து புறப்பட்டு புறவழிச் சாலையை கடக்க முற்பட்டார் அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த ஆணைக்காரன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!