News July 7, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் வருகிற ஜூலை 15 முதல் அக்டோபர் 15 வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 130 முகாம்களின் நடைபெற உள்ளது. தன்னார்வலர்கள் மூலம் ஜூலை7ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று வழங்கப்பட உள்ளது. முகாம்களில் மருத்துவ சேவைகளும் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்
Similar News
News July 7, 2025
மயிலாடுதுறை: சொந்த ஊரில் ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழகத்தில் காலியாக உள்ள ‘2299’ தலையாரி எனும் கிராம உதவியாளர் (VA) பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மயிலை மாவட்டத்தில் உள்ள 13 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 10-ஆம் வகுப்பு முடித்த, எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க! <<16974181>>(பாகம் -2)<<>>
News July 7, 2025
மயிலாடுதுறை : சொந்த ஊரில் அரசு வேலை (2/2)

➡️ விண்ணப்பிக்கும் நபர் அதே கிராமம் / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
➡️ வயது: 21-37 க்குள் இருக்க வேண்டும்
➡️ சைக்கிள் / டூவீலர் ஓட்ட தெரிந்திருந்தால் நல்லது
➡️ எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
➡️ கிராம உதவியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு விஏஓ-வாக பதவி உயர்வு வழங்கப்படும்
➡️ மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News July 7, 2025
இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் விண்ணப்பங்களை நேரில் பெற்றோ அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ 29.8.2025க்குள் விண்ணப்பிக்கலாம். சந்தேகமிருப்பின் 04364 -299790 என்ற அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.