News November 28, 2024
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தீவிர மழை எச்சரிக்கை

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (நவ.29) மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் அதி தீவிர மழை மற்றும் நாளை மறுநாள் (நவ.30) மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்!
Similar News
News December 24, 2025
மயிலாடுதுறை: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 24, 2025
மயிலாடுதுறை: SIR-ல் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் SIR-க்கு பிறகு 75,378 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள <
News December 24, 2025
மயிலாடுதுறை: பெண் மீது தாக்குதல் – 2 பேர் கைது

மயிலாடுதுறையை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி மகாலட்சுமி(60). இவரிடம் மயிலாடுதுறையை சேர்ந்த ஜியாவுதீன், ராமலிங்கம் ஆகியோர் ஆடு வாங்கியது தொடர்பாக ரூ.1.80 லட்சம் பாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில், பாக்கி பணத்தை கேட்டபோது இருவரும் மகாலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.


