News January 26, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தின் மழையளவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மணல்மேடு, கொள்ளிடம், தரங்கம்பாடி, செம்பனார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 6.30 மணி வரை பெய்த மழை அளவு விவரங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News January 26, 2026
மயிலாடுதுறை: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய இங்கே<
News January 26, 2026
மயிலாடுதுறை மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

1. மயிலாடுதுறை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!
News January 26, 2026
மயிலாடுதுறை: போலீசார் தீவிர சோதனை

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி ஸ்டாலின் உத்தரவின் பேரில் இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் மாவட்ட காவல் துறையினர் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் ரயில் நிலையம் வழிபாட்டு தலங்களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட அதிநவீன கருவிகளைக் கொண்டு சோதனை செய்தனர்.


