News August 4, 2024
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை,தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மிதமானது லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை நகரின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Similar News
News January 31, 2026
மயிலாடுதுறை: ராணுவத்தில் வேலை- APPLY NOW

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 31, 2026
மயிலாடுதுறை: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (52). இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவரான இவர், மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே பிரவுசிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது பிரவுசிங் சென்டரில் வேலை செய்து வந்த 16 வயது சிறுமிக்கு ரபீக் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 31, 2026
மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் போதை ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் போதை பொருள் சம்பந்தமாக ஏதேனும் புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்றால் கட்டணமில்லா எண் 10581 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


