News January 19, 2026

மயிலாடுதுறை: மருந்தை தின்று ஆடுகள் பலி

image

கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி மணி இருப்பு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனக்கு சொந்தமான 9 ஆடுகளை அருகில் உள்ள வயலில் நேற்று மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். அப்போது ஆடுகள் அந்த இடத்திலேயே இறந்து கிடந்துள்ளன. அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பன்றிகளை கொல்வதற்காக வைத்த குருணை மருந்தை ஆடுகள் தின்றதால் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆணைக்காரன்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News January 31, 2026

மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் போதை ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் போதை பொருள் சம்பந்தமாக ஏதேனும் புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்றால் கட்டணமில்லா எண் 10581 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News January 31, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!