News September 9, 2025
மயிலாடுதுறை: மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை

மயிலாடுதுறை அருகே முருகமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (62) உடல்நலம் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மன உளைச்சலில் நேற்று மருத்துவமனை ஜன்னலில் வேஷ்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 9, 2025
மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தொழில் முனைவோர் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். சுற்றுலாஆப்ரேட்டர்கள் விமான நிறுவனங்கள் உணவகங்கள் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த உதவும் சுற்றுலா நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து செப். 15க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
News September 9, 2025
மயிலாடுதுறை: பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

திருவெண்காடு அருகே நாங்கூரில் வண்புருஷோத்தம பெருமாள் கோயில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றான இங்கு பவித்ரோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் கடைசி நாளான நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. பெருமாள் நாங்கூர் மணிகர்ணிகா காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளினார். தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
News September 9, 2025
மயிலாடுதுறையில் குடிநீர் விநியோகம் இருக்காது

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை(செப்.10) புதன்கிழமை குடிநீர் விநியோகம் இருக்காது என நகராட்சி ஆணையர் வீர முத்துக்குமார் தெரிவித்துள்ளார். முடிகண்டநல்லூர் கொள்ளிடம் தலைமை குடிநீரேற்று நிலையத்திலிருந்து வரும் பிரதான குழாய்களில் பழுது நீக்கும் பணி நடைபெற உள்ளதால் நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. நகராட்சி மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்