News November 13, 2025
மயிலாடுதுறை: மணல் கடத்திய லாரி பறிமுதல்

கொள்ளிடம் அருகே புத்தூர் பகுதியில் போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது புத்தூர் பட்டக்கால் தெருவில் சவுடு மண் இறக்கிக் கொண்டிருந்த லாரியை பிடித்து லாரி டிரைவரிடம் விசாரித்தபோது, திருவாலி கிராமத்திலிருந்து அனுமதியின்றி சவுடு மண் எடுத்துவந்ததும், புத்தூரில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. லாரி டிரைவரான தினேஷ் குமாரை (24) கைது செய்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 13, 2025
மயிலாடுதுறை: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News November 13, 2025
மயிலாடுதுறை: ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் பொது இடத்தில் கையில் பட்டாக்கத்தி வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த சரித்திர பதிவேடு குற்றவாளியான அஞ்சாறுவார்த்தலை பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 13 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
News November 13, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், (நவ.12) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


