News September 26, 2025
மயிலாடுதுறை மக்களே இன்று கடைசி நாள்

மயிலாடுதுறையில் அண்ணா பிறந்த நாளை ஒட்டி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நாளை சனிக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. 13,15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோர் என 3 பிரிவுகளாக நடத்தப்படும் போட்டியில் கலந்து கொள்ள 7401703459 என்ற எண்ணில் பெயரை பதிவு செய்து, இன்று மாலை 5 மணிக்குள் dsomyd@gmail.com என்ற இணையதள முகவரியில் விவரங்கள் அடங்கிய நுழைவு படிவத்தை விண்ணப்பிக்க வேண்டும்.
Similar News
News September 26, 2025
மயிலாடுதுறை: புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் கல்வியில் சிறந்தது தமிழ்நாடு மற்றும் 2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழ் புதல்வன் புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான ஏடிஎம் அட்டைகளை வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News September 26, 2025
மயிலாடுதுறை: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் சார்பில் மா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மா சாகுபடி விவசாயிகளுக்கு பதப்படுத்துதல் உற்பத்தி சந்தைப்படுத்துதல் மற்றும் உற்பத்தியாளர் குழு அமைப்பதற்கான முக்கியத்துவம் பற்றி கலெக்டர் பேசினார். கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது
News September 26, 2025
மயிலாடுதுறை: மக்களே இதை செய்தால் கரண்ட் Bill வராது!

மயிலாடுதுறை மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, பின்பு உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள மின் பொறியாளர் அலுவகத்தை அணுகவும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!