News January 3, 2026
மயிலாடுதுறை மக்களுக்கு எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் சாலையை கடக்கும்போது கைபேசி பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ஒரு வழி பாதையில் எதிர்ப்புறமாக வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றம் எனவும் இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News January 11, 2026
மயிலாடுதுறை: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<
News January 11, 2026
மயிலாடுதுறை: மகளுக்கு பாலியல் தொல்லை – தந்தை கைது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பகுதியை சேர்ந்த 34 வயதான கட்டிடத் தொழிலாளி, அவரது மகளான 9 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 11, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பயண அட்டை பெறுவதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி வரை முகாம் நடைபெறுகிறது. அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முகாம் நடைபெறும். எனவே, மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


