News December 11, 2025
மயிலாடுதுறை: மகளை கர்ப்பமாக்கிய தந்தை

மயிலாடுதுறை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே மாணவியை அவரது தாயார் மருத்துவமனையில் பரிசோதித்த போது டாக்டர்கள், மாணவி 6 வாரம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இதில் அவரது தந்தை தான் காரணம் என தெரியவர போலீசார் அவரை போக்சோவில் கைது செய்தனர்
Similar News
News December 12, 2025
மயிலாடுதுறை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே<
News December 12, 2025
மயிலாடுதுறை: கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு

மயிலாடுதுறை சித்தர் காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நெல் சேமிப்பு கிடங்கில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை வாக்குப்பதிவு இயந்திர சரிபார்ப்பு பார்வையாளர் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி (சண்டிகர்) சோரப் குமார் அரோரா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News December 12, 2025
மயிலாடுதுறை: Apply பண்ணா போதும்.. வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


