News November 5, 2025
மயிலாடுதுறை போலீசார் எச்சரிக்கை

பொதுமக்கள் தங்களது அலைபேசிக்கு எஸ்எம்எஸ், மின்னஞ்சல் அல்லது வாட்ஸாப் வழியாக வரும், எஸ்பிஐ அல்லது பிற வங்கியின் ஏபிகே கோப்புகளை பதிவிறக்கம் செய்யவோ அல்லது நிறுவவோ வேண்டாம். இதன் மூலம் உங்களது தொலைபேசி சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்டு, உங்களது தகவல்கள் அல்லது வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படலாம். போலி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News November 5, 2025
மயிலாடுதுறை: பாம்பு கடித்து பரிதாப பலி

மணல்மேடு, தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (60). விவசாய தொழிலாளியான இவர் வயலில் புல் அறுக்கும்போது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மணல்மேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 5, 2025
மயிலாடுதுறை: நாளை பவர் கட் அறிவிப்பு!

மயிலாடுதுறை மின் கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (நவ,6) சேமங்கலம், ஆலவெளி, நத்தம், வேப்பங்குளம், சாவடி, மொழையூா், ஆனந்ததாண்டவபுரம், மணக்குடி, கீழிருப்பு, மாப்படுகை, மாங்குடி, வாணாதிராஜபுரம், அரையபுரம், ஆா்.கே.புரம், மறையூா், அசிக்காடு, முருகன்தோட்டம், செங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு, தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.


