News April 7, 2025

மயிலாடுதுறை: போராட்டம் அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் உண்ணாவிரத போராட்டம் ஏப்.8ஆம் தேதி நடைபெறுமென தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். இதில், தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும், குத்தகை விவசாயிகள் சாகுபடி உரிமையை உறுதிப்படுத்தி அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போரட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Similar News

News April 9, 2025

மயிலாடுதுறை: டாஸ்மாக் இயங்காது 

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை ஏப்.10 ஒருநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் உலர்தினமாக நாளை விடுமுறை என தெருவித்துள்ளார்.

News April 9, 2025

மயிலாடுதுறை: ரூ.50 லட்சம் வரை மானியம் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரையும், செம்மறி ஆடு, வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

மயிலாடுதுறை: ரயில் வழித்தடத்தில் மாற்றம்

image

செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ரயிலானது, நாளை விருதுநகரிலிருந்து மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மறுமார்க்கமாக மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் அன்றைய தினம் வழக்கமான பாதையில் மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

error: Content is protected !!